மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார் சிறீதரன் எம்.பி!

#SriLanka #Final #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார் சிறீதரன் எம்.பி!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையே அறத்திநகர் சாலை விளையாட்டு கழகம் நடத்திய மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளைப் பார்வையிட்டதுடன் வெற்றியாளர்களுக்குக் கோப்பைகளையும் வழங்கி வைத்தார்.

"இன்றைய இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் சிறந்ததொரு கருவியாக விளங்குகின்றன" எனச் சிறீதரன் எம்.பி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4