சுத்தியலால் தலையில் 21 முறை தாக்கி கொல்லப்பட்டுள்ள முன்னாள் கன்சர்வேடிவ் அமைச்சர்

#Murder #CourtOrder #Investigation #LANKA4 #ENGLAND #Politician #L4
Prasu
1 month ago
சுத்தியலால் தலையில் 21 முறை தாக்கி கொல்லப்பட்டுள்ள முன்னாள் கன்சர்வேடிவ் அமைச்சர்
ஆன் விடெகோம்ப் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​சுத்தியலால் தலையில் 21 முறை தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

அவரது கொலைக்குக் குற்றம் சாட்டப்பட்ட ஜோஷுவா கெர்ரி, ஜூலை 8 அன்று ஒரு சிவப்பு நிற வாக்ஸ்ஹால் கோர்சா காரில் அவரது வீட்டிற்கு வந்து முன்வாசல் வழியாக உள்ளே நுழைந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் காஷிஃப் மாலிக் குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் விடெகோம்பை அவரது சமையலறையில் சுத்தியலால் பலமுறை தாக்கி, நாற்காலியில் இருந்து அவரைத் தள்ளிவிட்டு, அவரது பணப்பையை எடுத்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

தெற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த 28 வயதான இவர், பின்னர் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!