இஸ்ரேலிய பிரதமரை கைது செய்ய அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்த நியூயோர்க் நகர மேயர்
#Arrest
#America
#Newyork
#government
#Lanka4
#Netanyahu
#Mayor
#L4
Prasu
14 hours ago
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒரு போர்க்குற்றவாளி என்றும், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானி அமெரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு நெதன்யாஹுவே பொறுப்பாளி எனச் சாடிய அவர், 73,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கும் நிவாரணங்களைத் தடுத்து மக்களைப் பட்டினி போட்டதற்கும் அவரே காரணம் என்றார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது பிடியாணையை நிறைவேற்ற நியூயோர்க் நகருக்கு நேரடியாகச் சட்ட அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்ட மேயர், அமெரிக்க மத்திய அரசு ICC உடன் இணைந்து நெதன்யாஹுவைக் கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு நியூயோர்க்கில் அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே