ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரி விதிப்பு!
கட்டாய உழைப்புத் தடைகளை (forced labor bans) செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் 10 - 12.5 சதவீதம் வரையான வரிவிதிப்பை அமுல்படுத்தியுள்ளது.
இந்த வரிகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.
அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான பரஸ்பர (reciprocal) வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததை தொடர்ந்து இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
10% வரியை எதிர்கொள்ளும் சில வர்த்தகப் பங்காளிகளில் கனடா, மெக்சிகோ, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை அடங்கும்.
இந்த வரிகளை விதிப்பதற்காக, மற்ற பொருளாதாரங்களின் வர்த்தக நடைமுறைகள் குறித்து பல மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்டதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த வரி விதிப்புகள், 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-இன் கீழ் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே