தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான அனுரவின் இனிப்பான செய்தி
பல்வேறு தியாகங்களுடன் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கையுடன் உத்தியோகபூர்வ முறைமைகள் ஊடாகப் பணத்தை நாட்டிற்குள் அனுப்பி, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாரிய பக்கபலமாகக் காணப்படுகின்றனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வருடாந்தம் 5–6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் வருமானம், கடந்த 2025ம் ஆண்டில் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும், இவ்வாண்டில் மாதாந்தம் 700 முதல் 850 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்குள் அனுப்பப்பட்டு, நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் வலுப்படுத்தும் முதன்மைக் காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உரிய முறையில் அந்நியச் செலாவணி உள்வருகையைத் தொடரும் தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே