வெளிநாட்டில் தொழில்புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அனுரவின் மகிழ்ச்சியான தகவல்

#SriLanka #government #Lanka4 #land #Foriegn #AnuraKumaraDissanayake #Workers #L4
Prasu
2 hours ago
வெளிநாட்டில் தொழில்புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அனுரவின் மகிழ்ச்சியான தகவல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பான 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனுரவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்டப் பிரிவு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவு, அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரிய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 202ம் ஆண்டிற்கான திட்டங்கள், அத்துடன் நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான முதலீடாக பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4