2.5 மில்லியன் டொலர் இழப்பு : உயர்மட்ட தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா? NPP அரசாங்கத்தின் தோல்வி என விமர்சனம்

#SriLanka #government #NPP #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
2.5 மில்லியன் டொலர் இழப்பு : உயர்மட்ட தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா? NPP அரசாங்கத்தின் தோல்வி என விமர்சனம்

அரசாங்கத்தின் 2.5 மில்லியன் டொலர் (750 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான) வெளிநாட்டு நிதியிழப்பு மற்றும் கடன் மோசடி தொடர்பாக அரசாங்க நிதி பற்றிய குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்துவதாகவும், இந்த தவறுக்கு காரணமான உயர்மட்ட அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த மோசடிக்குக் கணினிகள் தானாக நிதியை மாற்றவில்லை என்றும், மனிதர்களின் அனுமதியுடனேயே நிதிப் பரிமாற்றம் நடந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 'அமைப்பியல் தோல்வி' என்ற சொல்லைப் பயன்படுத்தி, அமைப்பைக் குறை கூறுவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

முயற்சி நடப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ஐ.தே.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த விவகாரத்தில் நான்கு நடுத்தர அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து பலிகடா ஆக்கியுள்ள அரசாங்கம், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் மீது எந்தவொரு நேரடிப் பொறுப்பையும் சுமத்தத் தவறிவிட்டது.

 மேலும், இந்தச் சைபர் தாக்குதல் தவிர்க்க முடியாதது என அரசாங்கம் கூறுவது பொய்யானது. இது அரசாங்கத்தின் தீவிர அலட்சியப் போக்கினால் ஹேக்கர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி அழைப்பாகும். 

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் 2016ஆம் ஆண்டின் காலாவதியான மின்னஞ்சல் சேவையகத்தையே பயன்படுத்தி வந்துள்ளது. அதற்கான பாதுகாப்புப் புதுப்பித்தல்கள் 2025 ஒக்டோபர் 14 உடன் நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் (2025 நவம்பரில்) இத்திருட்டுத் தொடங்கியுள்ளது. 

இறைமைக் கடன் மேலாண்மையை இலங்கை மத்திய வங்கியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட அரச கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு மாற்றும் செயல்முறையில், 18 மாத கால அவகாசம் இருந்தபோதிலும், உரிய வழிகாட்டல்களையோ பாதுகாப்பு விதிமுறைகளையோ வகுக்க நிதியமைச்சரும் நிதியமைச்சின் செயலாளரும் தவறிவிட்டுள்ளனர்

மத்திய வங்கிக்கும் புதிய அலுவலகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 மார்ச் மாதத்திலேயே கையெழுத்தானது. ஆனால், அதற்கு முன்பே 2026 ஜனவரியில் மோசடி நடந்து முடிந்துவிட்டது. 

மத்திய வங்கியிலிருந்த கடுமையான பன்முகச் சரிபார்ப்பு நடைமுறைகள் இல்லாமல், பாதுகாப்புச் சோதனைகள் இன்றி புதிய அலுவலகத்திலிருந்து மில்லியன் கணக்கிலான டொலர்கள் செலுத்த அனுமதித்ததே இந்த அசம்பாவிதத்திற்கு முதன்மைக் காரணமாகும். 2025 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரை நடந்த இந்தத் திருட்டை 'விசாரணை' என்ற போர்வையில் அரசாங்கம் பல மாதங்களாகப் பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தது.

 2026 ஏப்ரல் மாதம் கோப் குழுவின் முன் ஆஜராக நிதியமைச்சின் செயலாளர் மறுத்தது பாராளுமன்றப் பொறுப்புக்கூறலை அவமதிக்கும் செயலாகும். 2.5 மில்லியன் டொலர் இழப்பு என்பது வெறும் தொழில்நுட்பக் கோளாறோ அல்லது சைபர் தாக்குதலோ அல்ல  நிறுவனங்களைச் சரியாகக் கண்காணிக்கத் தவறிய மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்தின் ஆளுகைத் தோல்வியே இதற்கு நேரடி காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4