றீச்சா பாஸ்கரனின் 1,500 ஏக்கர் காணி: எம்பி அர்ச்சுனா சரமாரி கேள்வி!

#SriLanka #Lanka4 #land #ADDA #Archuna #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
றீச்சா பாஸ்கரனின் 1,500 ஏக்கர் காணி: எம்பி அர்ச்சுனா சரமாரி கேள்வி!

காணிகள் மற்றும் நிதி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா பரபரப்புக் குற்றச்சாட்டு! 'றீச்சா' நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாஸ்கரனின் முதலீடுகள் மற்றும் காணி கொள்வனவுகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் அவர் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரபலமான 'சுகிர் முல்லை' வெளியிட்ட காணொளியை ஆதாரமாகக் கொண்டு, அர்ச்சுனா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

குறிப்பாக, இயக்கச்சி பகுதியில் றீச்சா நிறுவனத்திற்காக சுமார் 1,500 ஏக்கர் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது? அந்தக் காணிகள் யாரிடமிருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டன? அதற்கான அரச வரிகள் முறையாகச் செலுத்தப்பட்டனவா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும், தனது நிறுவனத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக பாஸ்கரன், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டை அடமானம் வைத்து வங்கியிலிருந்து 50 கோடி ரூபா கடன் பெற்றதாகவும், அதேவேளை வெளிநாடுகளிலிருந்து சட்டபூர்வமான வங்கிப் பரிமாற்றங்கள் ஊடாக 1,500 கோடி ரூபாவிற்கும் அதிகமான முதலீடுகள் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் நோக்கிலேயே பாஸ்கரன் செயற்பட்டு வருவதாகவும், தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக உணர்ச்சிகரமான மற்றும் போலியான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தாம் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றால், பாஸ்கரனின் காணி மற்றும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசேட குழுவொன்றை நியமித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை இணைக்கும் அதிவேக தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களின் பயண நேரத்தைக் குறைப்பதே தனது முக்கிய இலக்காக இருப்பதாகவும், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே தனது அரசியல் பயணத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Lanka4 ஊடகத்தின் கருத்து

இங்கே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனக் கூறப்படுகிறது.

1,500 ஏக்கர் காணி வாங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும், வாங்கப்பட்ட 150 ஏக்கர் காணியுடன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட அருகிலுள்ள தென்னந்தோப்புகளையும் சேர்த்தாலும் மொத்தம் சுமார் 200 முதல் 225 ஏக்கர் வரை மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறுப்பினர்கள் குறித்து தேவையற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உண்மை எது என்பது சட்ட விசாரணைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்பட வேண்டும். 

எனவே, இறுதியில் கம்பி எண்ணப்போவது அர்ச்சுனாவா? அல்லது பாஸ்கரனா? என்பதை காலமே பதிலளிக்கும்.

உண்மை வெல்ல வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4