இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வலியுறுத்தி வொஷிங்டனில் போராட்டம்!!

#SriLanka #Israel #Netanyahu #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வலியுறுத்தி வொஷிங்டனில் போராட்டம்!!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி வொஷிங்டனில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 கனமழை மற்றும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

அத்துடன், , ஜார்ஜ்டவுனில் உள்ள போர் சீசன்ஸ் (Four Seasons) ஹோட்டலின் வரவேற்பறைக்குள் (lobby) சில போராட்டக்காரர்கள் அதிரடியாகப் புகுந்தனர். அங்குதான் நெதன்யாகு இரவு உணவருந்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 எனினும், போராட்டக்காரர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் பலவந்தமாக வெளியேற்றினர். இஸ்ரேல்  பிரதமருக்கு எதிராக போராட்டக்காரர்கள், கடும் விமர்சனங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4