அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு: அஜிங்கிய ரஹானே அதிரடி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணைத் தலைவரும் மூத்த துடுப்பாட்ட வீரருமான அஜிங்கிய ரஹானே, சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான ரஹானே, தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி மூலம் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
“வாழ்க்கையில் தொடக்கம் இருந்தால் முடிவும் இருக்கும்; சரியான நேரத்தில் விலகுவதே சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 12 சதங்கள் உட்பட 5,077 ஓட்டங்களை குவித்துள்ளார்.
மேலும் 90 ஒருநாள் போட்டிகளில் 2,962 ஓட்டங்களையும், 20 இருபது20 போட்டிகளில் 375 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணியை வழிநடத்தி 2-1 என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை வெற்றிபெறச் செய்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய சாதனையாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே