வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க தீர்மானம் - நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆலோசனை!

#SriLanka #Project #discussion #House #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க தீர்மானம் -  நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆலோசனை!

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

 அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடு முழுவதும் சுமார் 5,000 வீட்டுவசதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கான அவசியமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக, அமைச்சகத்தின் இரண்டு முன்னாள் செயலாளர்கள் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 நிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த தகவல்களை இக்குழு தற்போது மீளாய்வு செய்து வருவதாகவும், பரிந்துரைகளைத் தயாரித்து வருவதாகவும் கூறிய அமைச்சர் இந்த திட்டத்தின் கீழ் 2000 குடும்பங்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4