பீர் தயாரிப்பில் அரிசி, சீனி பயன்படுத்தலாமா? நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

#SriLanka #Court Order #rice #sugar #Lanka4 #beer #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
பீர் தயாரிப்பில் அரிசி, சீனி பயன்படுத்தலாமா? நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

பீர் தயாரிப்பதற்கு அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி, உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம சங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இதில் மதுவரி ஆணையாளர் நாயகம், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் மக்கள் பயன்பாட்டிற்காக அரிசி உற்பத்திக்கு அதிக மானியம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பீர் போன்ற வணிக ரீதியான உற்பத்திக்கு அரிசியைப் பயன்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, அரிசி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதையும் சீர்குலைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

விசாரணையின் போது, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டனர்.

இதையேற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வழக்கை அக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4