உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு!
முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிரந்தர சட்ட விசாரணை நீதிமன்றம் இன்று (31) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கைகள் முன்னதாக பெறப்பட்டிருந்தாலும், தாக்குதலை தடுக்க தவறியமைக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக, கடமையில் குற்றவியல் அலட்சியம், கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றங்களில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர சட்ட விசாரணை நீதிமன்றத்தின் அமர்வின் முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே