நீர்கொழும்பு கடலில் சோகம்: காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு – மேலும் 3 படகுகளைத் தேடும் பணிகள் தீவிரமாய்!

#SriLanka #Negombo #Lanka4 #Missing #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
நீர்கொழும்பு கடலில் சோகம்: காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு – மேலும் 3 படகுகளைத் தேடும் பணிகள் தீவிரமாய்!

நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ளதாக, கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது. குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், குறித்த படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.

அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4