மரண தண்டனை வரை செல்லலாம்: ரவி, ஷானி குறித்து உதய கம்மன்பில கருத்து
முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பே ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பாக பல முக்கிய புலனாய்வு தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இருந்ததாகவும், அவற்றின் அடிப்படையில் தாக்குதலைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் கொலை, மாவனெல்லை புத்தர் சிலை சேதப்படுத்தல், வண்ணாத்திவில்லு வெடிபொருள் மீட்பு உள்ளிட்ட பல வழக்குகள் மூலம் ஸஹ்ரான் குழுவின் செயற்பாடுகள் குறித்து தகவல்கள் கிடைத்திருந்ததாகவும், அவை புறக்கணிக்கப்பட்டதாகவும் கம்மன்பில கூறினார்.
தனது 'பிரதானி சூத்திரதாரி' நூலில் ஷானி அபேசேகருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான சாட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், எனவே ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கும் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே