இலங்கையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளின் மூன்று விதமான முடிவுகள்

#SriLanka #Police #government #Lanka4 #officer #L4
Prasu
2 hours ago
இலங்கையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளின் மூன்று விதமான முடிவுகள்

இலங்கை காவல்துறை திணைக்களத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அடுத்தடுத்து பதவி வகித்த மூன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர்களும் (IGP) முன்னோடியில்லாத சட்ட மற்றும் தனிப்பட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளமை நாட்டின் நீதி மற்றும் சட்ட அமுலாகத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதன்படி, 34வது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜெயசுந்தரவிற்கு 2019 உயிர்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 35வது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன தனது தனிப்பட்ட வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும், 36வது பொலிஸ் மா அதிபரான தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு, பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் வெளியேறியுள்ளார்.

நாட்டின் பொலிஸ் தலைமைத்துவ வரலாற்றில் இடம்பெற்ற இந்தத் தொடர் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4