அவுஸ்திரேலியா மற்றும் லிதுவேனியாவிற்கு நன்றி தெரிவித்த இமானுவல் மேக்ரான்

#France #Australia #Lanka4 #President #WildFire #Lithuania #L4
Prasu
3 hours ago
அவுஸ்திரேலியா மற்றும் லிதுவேனியாவிற்கு நன்றி தெரிவித்த இமானுவல் மேக்ரான்

தென்மேற்கு பிரான்சில் கடந்த வாரம் பற்றியெரியத் துவங்கிய காட்டுத்தீ, சுமார் 42,000 ஹெக்டேர் பரப்பை தீக்கிரையாகியுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்க அவுஸ்திரேலியா மற்றும் லிதுவேனியா முன்வந்துள்ளன.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரான பென்னி வாங், பிரான்சுக்கு உதவியாக காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்களையும், ஹெலிகொப்டர், தீயணைப்பு விமானம் உட்பட தீயணைப்பு கருவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, லிதுவேனியா வெளியுறவு அமைச்சகம், பிரான்ஸ் காட்டுத்தீயை அணைப்பதற்காக, 32 தீயணைப்பு வீரர்களையும், 9 சிறப்பு வாகனங்களையும், 5 தீயணைப்பு வாகனங்களையும் அனுப்புவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அவுஸ்திரேலியாவுக்கும், லிதுவேனியாவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4