03 கிராம அலுவலர் பிரிவில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
#SriLanka
#Police
#Curfew
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ராகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மூன்று கிராம அலுவலகர் (GN) பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த இந்த ஊரடங்கு, மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 C கெண்டலியத்த வீதி - வடக்கு, மற்றும் 181 G - தம்புவ ஆகிய கிராம நிலதாரி பிரிவுகளில் மட்டுமே அமலில் இருந்தது.
அதன்படி, இந்தப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தற்போது நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே