மஹர சிறைக்கலவரம் - விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), மஹர சிறைக் கலவரம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று இன்று (02) சிறைக்குச் சென்று சம்பவ சூழ்நிலைகளை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (IHRO) பிரதிநிதிகளும், சம்பவத்தைத் தொடர்ந்து நிலவும் சூழலை ஆய்வு செய்வதற்கும் நிலைமைகளை மதிப்பிடுவதற்கும் சிறைச்சாலைகளுக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விஷயம் குறித்துப் பேசிய அந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் சுபாஷனா சுபாவிக்ரம, இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் பகுதியாக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.
“பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அனைத்தும் அழிக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், கைதிகள் தங்குவதற்கு அந்த இடம் உகந்த நிலையில் இல்லை. “இது கைதிகளின் செயல்கள் அல்லது கோரிக்கைகளால் நடந்ததா, அல்லது வேறு ஒரு தரப்பினரின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டதா என்பதை நாம் கண்டறிய வேண்டும்.”
"இது ஒரே அறைக்குள் சில தனிநபர்களால் செய்யப்பட்டிருக்கக்கூடிய செயல் அல்ல. சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, இது ஒரு திட்டமிட்ட செயலின் விளைவாக இருக்கலாம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே