பற்றி எரிந்த கப்பல் அலறிய 271 பேர்.

#Death #Indonesia #LANKA4 #ImportantNews #Word #Ship #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 months ago
பற்றி எரிந்த கப்பல் அலறிய 271 பேர்.

இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே 271 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் மாயமாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயா நகரிலிருந்து தெற்கு சுலவேசியின் மகாசார் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலில் இன்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.

கப்பலில் இருந்த 271 பேரில் 225 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும், 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மாயமான 41 பேரை தேடும் பணி கடலோர காவல் படையினர் மற்றும் மீட்புக் குழுக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. 

தொழில்நுட்ப கோளாறு, மின்கசிவு அல்லது பிற காரணங்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரா தீவு அருகிலுள்ள இந்த கடற்பாதை மிகவும் பரபரப்பான போக்குவரத்து வழித்தடமாகும். கடல் சீற்றம் காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக உள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!