விண்வெளியில் இருந்து வியக்க வைத்த நாசா விண்வெளி வீரர்! Phone-இல் எடுத்த புகைப்படம் வைரல்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிரம்மாண்டமான தோற்றத்தை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் புகைப்படமாகப் பதிவு செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூமியின் வளைவுப் பகுதியும், பசிபிக் பெருங்கடலின் பிரம்மாண்டமான சுழல் வடிவக் காட்சியும் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ள இந்த நிழற்படம், தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே, இது எந்தவொரு கனமான, தொழில்முறை கேமராவாலும் எடுக்கப்பட்டது அல்ல.
மாறாக, ஒரு சாதாரண iPhone கைப்பேசியைப் பயன்படுத்தியே எடுக்கப்பட்டது என்று அனில் மேனன் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியையும், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகையும் ஒரே நேரத்தில் பறைசாற்றும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது என உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களும் விண்வெளி பிரியர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே