பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை! பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு.
#SriLanka
#Lanka4
#Warning
#Flood
#Divisional Secretariat
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
கண்டி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பஹத்ததும்பர ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெள்ள நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே