சீரற்ற வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்.
#SriLanka
#weather
#Department
#Lanka4
#information
#Meteorology
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 day ago
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை நாளை (04) காலை வரை தொடரும் என்றும், அதன் பின்னர் நண்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜப்பானுக்குத் தெற்கே பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சூறாவளியின் தாக்கம் ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் இலங்கையில் உணரப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, ஓகஸ்ட் 6ஆம் திகதியிலிருந்து நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே