இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் மற்றவர் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்

மனதில் நிம்மதியும் உற்சாகமும் நிலவும். தெய்வ அருள் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேருவர். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடி குறையும். தொழிலில் புதிய திட்டங்கள் தொடங்கலாம்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுக்கலாம். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவர். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கடகம்

மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். மாலை நேரம் மகிழ்ச்சியானதாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணியிடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. பொருளாதார நிலை மேம்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.,மாணவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஆலோசனை பயன் தரும்.காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. வீட்டிற்கு நல்ல வேலையாள் கிடைப்பார்கள். உடல்நலம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மனநிறைவு அதிகரிக்கும்.

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

துலாம்

தொழிலில் வளர்ச்சிக்கான புதிய பாதை திறக்கும்.சொகுசு கார் வாங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் பெறுவர்.ஊடகத் துறையினருக்கு மதிப்பு கூடும். உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். இறை வழிபாடு மனநிறைவை அளிக்கும்.

விருச்சிகம்

வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சி தரும். புதிய தொடர்புகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

தனுசு

பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.. நண்பர்களின் ஆதரவு உற்சாகம் தரும்.பெண்களுக்கு சமூகத்திலும் வீட்டிலும் தங்கள் மரியாதை அதிகரிக்கும். சமூக நலனில் ஆர்வம் கூடும். எண்ணிய செயல்கள் இனிதே நிறைவேறும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

மகரம்

அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். மேலதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் தவறாக பேச வேண்டாம். பேசினால் பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பயணங்கள் அனுகூலமாக அமையும். மன அமைதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்

பெண்களுக்கு வீட்டில் மதிப்பு கூடும். தாய் மீது அன்பு அதிகரிக்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும். மார்கெட்டிங்பிரிவினருக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் தங்களுக்கு முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் கிடைக்கும். உடல் நலம் தேறிவரும்.

மீனம்

குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கலாம். பொருளாதார நிலை மேம்படும். உறவினர்கள் வருகை உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உடல் நலம் தேறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4