புலமைப்பரிசில் பரீட்சை - மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை!
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் முடியும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காலகட்டத்தில், கணிக்கப்பட்ட பரீட்சை வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் புழக்கத்தில் விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பரீட்சை வினாக்கள் அல்லது அதுபோன்ற வினாக்களை வழங்குவதாகக் கூறி, சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மின்னணு, அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விளம்பரப் பொருட்களை வைத்திருப்பதும் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2 ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சைமையங்களில் நடைபெற உள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே