சிறு கடனாளி தண்டனை; பெரியவர்களுக்கு சலுகையா?
இன்று (05.08.2026) பாராளுமன்றத்தில் அரச வங்கிகளில் பெரும் கடன் பெற்று நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது.
சிறிய அளவிலான கடன் பெற்ற சாதாரண மக்கள் தவணைகளை செலுத்தத் தவறினால், Parate Execution உள்ளிட்ட சட்டங்களின் மூலம் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று செலுத்தாத பெரிய கடனாளிகள், செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது அதே சட்டம் ஏன் சமமாக அமுல்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
அத்துடன், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் அரச அடமான மற்றும் முதலீட்டு வங்கி ஆகியவற்றின் தற்போது நிலுவையில் உள்ள 20 மிகப்பெரிய கடன் கணக்குகள் மற்றும் கடந்த 15 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட 20 மிகப்பெரிய கடன்கள் தொடர்பான முழுமையான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடனாளிகளின் பெயர்கள், நிலுவைத் தொகைகள், பிணை விவரங்கள், மீட்பு நடவடிக்கைகள், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே