இங்கிலாந்தில் பாரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பேருந்து ஓட்டுநர்கள்

#strike #Bus #Lanka4 #London #England #Driver #L4
Prasu
2 hours ago
இங்கிலாந்தில் பாரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பேருந்து ஓட்டுநர்கள்

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள எட்டு பணிமனைகளைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அரிவா நார்த் லண்டன் (Arriva North London) நிறுவனத்தில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களே மேற்படி வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் மாதம் வரை 26 நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வடக்கு லண்டன் மற்றும் எசெக்ஸ் முழுவதும் பேருந்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும்.

கடுமையான வெப்பத்தின் போது ஓட்டுநர்களைப் பாதுகாக்க நிலைமைகளை மேம்படுத்துமாறு அரிவா நிறுவனத்தை தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், நிலைமைகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4