சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் லெஜியோனேயர்ஸ் நோய்த்தொற்று: ஒருவர் மரணம் - 26 பேர் பாதிப்பு

#Death #Switzerland #Hospital #Disease #Lanka4 #Bacteria #L4
Prasu
2 hours ago
சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் லெஜியோனேயர்ஸ் நோய்த்தொற்று: ஒருவர் மரணம் - 26 பேர் பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ் என்னும் நோயே பாஸலில் பரவிவருகிறது. 

இதனால், 26 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஏழு பேருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவு தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "வருந்தத்தக்க வகையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்" என்று பேசல்-சிட்டி மாகாணம் குறிப்பிட்டுள்ளது.

லெஜியோனேயர்ஸ் நோய், நீர் மற்றும் மண்ணில் காணப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. 

இதன் தீவிரம், லேசான இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயிலிருந்து, கடுமையான மற்றும் சில சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் நிமோனியா வரை மாறுபடும்.

காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் சில சமயங்களில் இரத்தத்துடன் கூடிய இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த நோய் மனிதர்களுக்கு இடையே நேரடியாகப் பரவுவதில்லை. சரியாகப் பராமரிக்கப்படாத குளிரூட்டிகள் மற்றும் நீர் அமைப்புகள், ஈரப்பதமூட்டிகள் மற்றும் நீர்ச்சுழல் குளியல் தொட்டிகள் ஆகியவற்றுடன் இந்த நோய்ப் பரவல்கள் பெரும்பாலும் தொடர்புடையவை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4