கடும் மழையால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறங்கும் அபாயம்!

#SriLanka #Colombo #Rain #Road #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
கடும் மழையால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறங்கும் அபாயம்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை – ரொசெல்ல பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழிப் பாதையில் மட்டுமே இடம்பெற்று வருவதாகவும், ஹட்டன் முதல் கித்துல்கல வரை பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ஹட்டன் – போர்டைஸ் வழியாக டயகம செல்லும் வீதியின் எல்பின் தோட்டப் பகுதியில் பாரிய பாறை ஒன்று சரிந்து வீதியில் விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

பின்னர், அக்கரபத்தனை பிரதேச சபை, பிரதேச மக்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் ஒத்துழைப்புடன் பாறை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வீதியில் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4