பொலிஸை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்

#SriLanka #Police #Lanka4 #President #work #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
பொலிஸை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 1,000 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டின் கீழான திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிதல், புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தை பொலிஸ் புனர்வாழ்வு மையமாக அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சுயவிருப்பத்தின் பேரில் புனர்வாழ்வுக்காக வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக முன்னெடுக்கப்படும் ஆலோசனைத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

உத்தேச பொலிஸ் தலைமையகம் மற்றும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணித்தல், புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தல், இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்குதல், சீருடைகளைப் புதுப்பித்தல் மற்றும் பொலிஸ் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. 

அத்துடன், அதிக பணிச்சுமை காரணமாக பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்கும் வகையில் இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரும் தீவிர பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தற்போது இயங்கிவரும் புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கும் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, முறையான ஒருங்கிணைப்புடன் கூடிய தேசியத் திட்டமாக அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4