விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா
தமிழக முதலமைச்சரும் தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா திரும்ப பெற்றுள்ளார்.
லண்டனில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முன்னிலையான சங்கீதா , வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 15ம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சில நடைமுறை கேள்விகளை எழுப்பியதுடன், இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதலஅமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், லண்டனில் இருந்த இணைந்த சங்கீதா, விவாகரத்து மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே