தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை: மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

#SriLanka #Srilanka Cricket #students #Examination #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை: மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.08.2026) இடம்பெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள 2723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம் முறை தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைகளுக்காக மொத்தம் 294,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன் அவர்களில் சிங்கள மொழியில் 220,366 விண்ணப்பதாரர்களும், தமிழ்மொழியில் 73,723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்பட்டு நாளை காலை-09.30 மணியளவில் தொடங்கி முற்பகல்- 10.45 மணியளவில் நிறைவடையும்.அதன் பின்னர் சிறிய இடைவேளைக்குப் பின்னர் முற்பகல்-11.15 மணி முதல் பிற்பகல்-12.15 மணி வரையான ஒரு மணி நேர காலம் பகுதி-01 வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.

மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணிக் கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாகப் பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து தங்களது பரீட்சை இலக்கத்தைச் சரியாகக் குறிப்பிட்டு தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும். 

கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4