கிளிநொச்சி திருவையாறுப்பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா செய்கை அறுவடை.

#SriLanka #Kilinochchi #LANKA4 #ceremony #harvest #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Abi
1 month ago
கிளிநொச்சி திருவையாறுப்பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா செய்கை அறுவடை.

கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் நடராசா சிவகுமார் என்பவரது குரு அக்ரோ பாமில் செய்கை மேற்கொள்ளப்பட்ட நான்கு ஏக்கர் கறுவா அறுவடை விழா நேற்று மாலை நடைபெற்றது .

முருகானந்தா கல்லூரி முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.

நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர்(பொறியியல்) ந.சுதாகரன்,கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கை.பிரகாஸ், கிளிநொச்சி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம்,விவசாய பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,குறித்த செய்கைக்காக தொழில் நுட்ப ஆலோசணையை ரொட்டறிக்கழகம் வழங்கியிருந்தது. ரொட்டறிக்கழக உறுப்பினர்கள்,பிரதேச விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!