வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசலகூட தொகுதிகள் கையளிப்பு3

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசலகூட தொகுதிகள் கையளிப்பு3

தற்காலிக மலசல கூட தொகுதிகள் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கும் பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்கள் வருடாந்த பருவப்பேச்சி மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுவதோடு பல இடைத்தங்கல் முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலன்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

குறிப்பாக முருக்கன்தீவு , சாறாவெளி , பிரம்படித்தீவு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடம் பெயர்வது வழமையான நிகழ்வாகும் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக இப்பாடசாலை பயன்படுத்தும் போது பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லாமையினால் பாடசாலை சுற்றுச்சூழலிலும் அயற் பிரதேசத்திலும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர் குறிப்பாக பெண்களும் சிறார்கள் இவ் விடயத்தில் மிகவும் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கின்றனர்.

இவ்விடயங்களை கருத்தில் கொண்ட கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வாழைச்சேனை world vision நிறுவனத்திடம் கோரிக்கை கொண்டமைக் அமைய அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக மலசல கூட தொகுதிகள் எதிர்காலத்தில் இப் பிரதேசத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கும் குறிப்பாக சரஸ்வதி வித்யாலயத்திலும் பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் , கோறளைப்பற்று தவிசாளர் எஸ்.சுதாகரன், world vision அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4