டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு – 89,033 பேர் பாதிப்பு

#SriLanka #Death #Lanka4 #Dengue #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Abi
3 hours ago
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு – 89,033 பேர் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 52.94% பேர் (47,136) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் 18,922 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 17,679 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,298 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,569 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக தொடர்ந்தும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4