பழங்குடி மக்களின் உரிமைகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாக பிரதமர் ஹரினி உறுதி
#SriLanka
#PrimeMinister
#people
#Lanka4
#cultural
#Harini Amarasooriya
#L4
Prasu
2 hours ago
இலங்கையின் பூர்வீக வேதா சமூகத்தினரின் உரிமைகள், கலாசார பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக வேதா சமூகத்தினரால் கோரப்பட்டு வந்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பழங்குடியின மக்கள் சட்டமூலம் தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
பழங்குடியின சமூகம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அரசாங்கம் சட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என பிரதமர் அமரசூரிய தெரிவித்தார்.
தம்பனை பூர்வீக பாரம்பரிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான உலக பூர்வீக குடிமக்கள் தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே