கால் வைத்தால்.. காலை வெட்டுவோம் ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்: ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா தரைவழித் தாக்குதலை மேற்கொண்டால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தால் அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலளிக்கப்படும் என ஈரான் இராணுவ தரைப்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமெரிக்க இராணுவத்தினர் ஈரானிய மண்ணில் கால் பதித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், ஈரான் இராணுவத் தளபதியின் இந்தக் கருத்து மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான மோதல் நீடிப்பது சர்வதேச அரசியல் மற்றும் உலக எரிசக்திச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அடுத்தகட்ட நகர்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே