கொலம்பியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 240 ஆக உயர்வு
#Death
#Earthquake
#Lanka4
#Rescue
#Colombia
#Missing
#L4
Prasu
3 hours ago
உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
கொலம்பியாவின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மையமாகக் கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்7.4 ஆகப் பதிவானது.
இந்த பூகம்பகத்தால் சான் ஹோசே டெல் பால்மர், கலி, பெரேரா, மனிசாலெஸ் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதில் இதுவரை சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 570 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அங்கு மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே