ஏர் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனை: அதிர்ச்சியளித்த உறுதி முடிவு!

#India #LANKA4 #World #Cannabis #Pilot #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 months ago
ஏர் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனை: அதிர்ச்சியளித்த உறுதி முடிவு!

புக்கெட்டிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானி, இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் கஞ்சா பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 4ஆம் திகதி நடுவானில் பயணித்தபோது, விமானம் திடீரென சுமார் 300 அடி உயரம் கீழிறங்கி, பலத்த குலுக்கலுக்கு உள்ளானது. இதனால் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானிகளுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில், குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக கண்டறியப்பட்டது.

பின்னர் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில், அவர் கஞ்சா பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் அடிப்படையில் குறித்த விமானி உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!