தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்கு பிரான்ஸ் அதிரடி தடை!
வாடிக்கையாளர்களின் முன்அனுமதி இல்லாமல் வணிக ரீதியிலான விளம்பரத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கு பிரான்ஸ் நாடு தழுவிய தடையை அமுல்படுத்தியுள்ளது.
2026 ஆகஸ்ட் 11 முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தின்படி, இதுவரை நடைமுறையில் இருந்த ‘Opt-out’ முறைக்கு பதிலாக, நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டிய ‘Opt-in’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விளம்பர அழைப்பை மேற்கொள்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்.
எனினும், ஏற்கனவே ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதற்கு சில வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளை மீறும் தனிநபர்களுக்கு 75,000 யூரோக்கள் வரையிலும், நிறுவனங்களுக்கு 3,75,000 யூரோக்கள் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தொலைபேசி வழி மோசடிகள் மற்றும் தேவையற்ற வர்த்தக அழைப்புகளைக் கட்டுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே