வெப்பமடையும் கடல்... அதிகரிக்கும் அந்நிய உயிரினங்கள்: விஞ்ஞானிகள் கவலை
மத்திய தரைக்கடல் பகுதியில் அந்நிய கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு கடல் வெப்பநிலை உயர்ந்து வருவதும், சூயஸ் கால்வாய் வழியாக வெப்பமண்டலப் பகுதிகளைச் சேர்ந்த உயிரினங்கள் மத்திய தரைக்கடலுக்குள் நுழைவதும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
சமீபத்திய ஆய்வின்படி, இப்பகுதியில் சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய அந்நிய உயிரினம் பதிவாகி வருகிறது.
தற்போது மத்திய தரைக்கடலில் 1,000-க்கும் மேற்பட்ட அந்நிய உயிரினங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிங்கமீன், முயல்மீன் மற்றும் சில பஃபர் மீன் இனங்கள் உள்ளூர் கடல்வாழ் உயிரினங்களுடன் போட்டியிடுவதுடன், உணவுச் சங்கிலி மற்றும் மீன்பிடித் தொழிலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சைப்ரஸில் சிங்கமீன்களின் எண்ணிக்கையைக் குறைக்க சிறப்புப் பொறிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இவ்வகை மீன்களை பாதுகாப்பான முறையில் உணவாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பது இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய தரைக்கடல் கடல் சூழலைப் பாதுகாக்க நீண்டகால கண்காணிப்பும் உரிய நடவடிக்கைகளும் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே