கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழப்பு 250-ஐ கடந்தது!
#Death
#Earthquake
#Lanka4
#Colombia
#World
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
2 hours ago
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி 7.4 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சில கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளன. இதையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே