“சட்டம் அனைவருக்கும் சமம் – சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்!” – சந்திரசேகரம் ராஜன்
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலை குழுத் தலைவர் சந்திரசேகரம் ராஜன், அரச ஊழியர்கள் அரசாங்கச் சட்டங்களையும் சுற்றறிக்கை நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சீருடை வழங்கப்படும் அரச ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சீருடையையே அணிந்து கடமையாற்ற வேண்டும் என அரசாங்க சுற்றறிக்கைகள் தெளிவாகக் குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சீருடை தொடர்பான விதிமுறைகள் இன, மத, மொழி அல்லது சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கானவை அல்ல எனவும், அனைத்து ஊழியர்களும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கல்முனை ஆதார வைத்தியசாலையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் சேவையாற்றி வருகின்றனர்.
இந்த விடயத்தை சமூக அல்லது மத முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் பயன்படுத்த வேண்டாம்” என சந்திரசேகரம் ராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே