கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: 5 டிப்பர்கள், உழவு இயந்திரம் பறிமுதல்!

#SriLanka #Kilinochchi #Lanka4 #illegal #Sand #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: 5 டிப்பர்கள், உழவு இயந்திரம் பறிமுதல்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர் வாகனங்களும் ஒரு உழவு இயந்திரமும் சிறப்பு அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேறு பகுதியைச் சேர்ந்த மணல் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று (12.08.2026) சிறப்பு அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் தொடர்பான தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4