கல்முனை வைத்தியசாலை உடை விவகாரம்: சுமந்திரன் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!
கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மத மற்றும் கலாச்சார உடை சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் நேரடியாகத் தலையிட்டு, வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சமூகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மக்கள் நீண்டகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கல்முனையில், தற்போதைய விவகாரம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாறாமல் பொறுப்புடன் அணுகப்பட வேண்டும் என்றும் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சாரத்தைப் பேணும் ஆடை உரிமையை உறுதிப்படுத்துவதுடன், மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தி இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே