வெள்ளை மாளிகை கட்டுமானத்திற்காக $900 மில்லியன் செலவழிக்க உள்ள டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், வெள்ளை மாளிகை வளாகத்தில் நடைபெறும் கட்டுமானத் திட்டங்களுக்காகக் குறைந்தது 900 மில்லியன் டாலர் செலவழிக்கத் தயாராகி வருவதாக, ஆவணங்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸிடமிருந்து நேரடியாகப் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக, நிர்வாகம் மற்ற முகமைகள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, வெள்ளை மாளிகையின் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காகச் சில மில்லியன் டாலர்களைக் கொண்டுள்ள ஒரு கணக்கிற்கு அதை அனுப்பியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கில் உள்ள பணத்தை வெள்ளை மாளிகையின் "நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு" பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதை இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான திட்டமிடல் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே