சிறுவர் உழைப்புக்கு முற்றுப்புள்ளி – அபராதம் ரூ.10,000 இலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்கிறது!

#SriLanka #children #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Labor
Abi
1 hour ago
சிறுவர் உழைப்புக்கு முற்றுப்புள்ளி – அபராதம் ரூ.10,000 இலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்கிறது!

இலங்கையில் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கான அபராதத்தை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 வரை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உடன்படிக்கைகளுக்கு ஏற்ப நாட்டின் தொழிலாளர் சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போதுள்ள தண்டனைகள் குற்றங்களைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை எனக் கருதப்படுவதால், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்துதல் மற்றும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4