கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது சிறுமி
#Canada
#Investigation
#Lanka4
#GunShoot
#L4
Prasu
2 hours ago
கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த பகுதியில், துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 வயதுச் சிறுமியைக் கண்டறிந்தனர்.
காவல்துறையினர் அச்சிறுமிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை மர்ம மரணமாகக் கருதி எட்மண்டன் காவல்துறையின் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே