அனைத்து மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு வரை வாய்ப்பு – கல்வி சீர்திருத்தத்தில் புதிய திட்டம்
#SriLanka
#Student
#Lanka4
#education
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
கல்வியியல் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரு பிரிவுகளின் ஊடாகவும் மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கும், தொழில் துறையில் பிரவேசிப்பதற்குமான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் உருவாக்கப்படும் கல்வி முறைமையில், அனைத்து மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு வரை முன்னேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 19ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே