தலவாக்கலை ஊடாக பயணித்த 28 வாகனங்கள் தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கம்!
தலவாக்கலை ஊடாக பயணித்த 40 வாகனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 28 வாகனங்கள் தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, பல்வேறு குறைபாடுகளுடன் போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதன்போது 4 தனியார் பேருந்துகள் மற்றும் 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்களின் வருமான அனுமதிப்பத்திரங்கள் அதிகாரிகளின் பொறுப்பில் பெறப்பட்டு, அவை தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களில் காணப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை அவற்றை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நுவரெலியா மாவட்டம் முழுவதும் இதுபோன்ற வாகனச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே